GPM மீடியாவின் வாசகர்கள் மற்றும் இரத்த கொடையாளர்கள் தங்கள் இரத்த வகை குறித்த விவரங்களை கூகுள் படிவத்தில் நிரப்புங்கள்...



GPM மீடியாவின் வாசகர்கள் மற்றும் இரத்த கொடையாளர்கள் தங்கள் இரத்த வகை குறித்த விவரங்களை கூகுள் படிவத்தில் நிரப்பி அனுப்பும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

அவசர காலத்தில் மற்றவர்களுக்கு உதவும் வகையில் இந்த தகவல்கள் சேகரிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

உதிரம் கொடுத்து உயிரை காப்போம்

இரத்ததானம் என்பது ஒருவருக்கு தாம் கொடுக்கும் உயிர் தானம் ஆகும்.

அனைவரும் இரத்த வகையை தெரிந்துகொள்ளவும், மற்றவர்களுக்கு தானம் வழங்கவுமே ஜூன்-14ஆம் தேதி இரத்த கொடையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இதன் நோக்கமே, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் ரத்த வகையை அறிந்து கொள்வதோடு, உயிர்காக்க உதிரம் கொடுக்க வேண்டும் என்பதே. ரத்தம் இல்லாமல் ஒருவர் உயிரிழக்கிறார் என்றால், ரத்த வகையை அறிந்துகொள்ளாமல் இருப்பதே அதற்கு முக்கியக் காரணம்.

தற்போது இரத்த தேவை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்குவது, சிலர் நாள்பட்ட நோய்களினால் பாதிக்கப்படுவது, இரத்தக்குறைபாடு போன்ற காரணங்களால் ஒரு சில நேரங்களில் அவசரமாக இரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் இன்றைய கால சூழ்நிலையில் நாம் இரத்தம் வேண்டி பல நபர்களை தொடர்பு கொண்டிருப்போம். ஆனால் குறிப்பிட்ட வகை இரத்தம் உடையவர் நமது அருகாமையில் இருந்திருப்பார்கள் ஆனால் நமக்கு தெரியாமல் போயிருக்கும். நிறைய பேருக்கு அவசர நேரத்தில் இரத்தம் தேவைப்படுகிறது. சில வகை இரத்தம் குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே உள்ளது.
 
​தங்களுடைய இரத்த விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை (Google forms) கிளிக் செய்து பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கின்றோம்.


அல்லது கீழ்கண்டவாறு உங்களுடைய தகவல்களை எங்களுடைய வாட்ஸ்ஆப் நம்பருக்கு https://wa.me/918270282723 எழுதி அனுப்பும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

* உங்கள் பெயர்:

* உங்கள் இரத்த வகை:

*‌உங்கள் மொபைல் நம்பர்:

* உங்கள் வாட்ஸ்அப் எண்:

*‌உங்கள் ஊர் பெயர்:

* உங்கள் மாவட்டம்:

* கடைசியாக எப்போது இரத்தம் கொடுத்தீர்கள்: 

போன்ற விவரங்களை டைப் செய்து அனுப்பும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு...
GPM மீடியா குழு,
கோபாலப்பட்டிணம்
மீமிசல் - 614621
புதுக்கோட்டை மாவட்டம்

யாரெல்லாம் இரத்த தானம் செய்யலாம்: அதனால் கிடைக்கும் நன்மைகள்:
 
இரத்த தானம் செய்தால் நன்மைகளைத் தான் ஏராளமாக பெறலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

மனிதனின் உடலில் சுமார் 5-6 லிட்டர் இரத்தம் இருக்கும். இரத்த தானம் செய்வோர் ஒரே நேரத்தில் 300 மிலி இரத்தம் வரை தானம் செய்ய முடியும். இப்படி தானம் செய்யப்படும் இரத்தமானது 2 வாரங்களில் நம் உடலில் உண்ணும் உணவுகளால் உற்பத்தி செய்யப்பட்டுவிடும்.

 இரத்த தானம் செய்வது என்பது, உடலில் புதிய இரத்தத்தின் அளவை அதிகரிப்பதற்கு சமம். எனவே உங்களுக்கு புதிய இரத்த செல்கள் வேண்டுமானல், இரத்த தானத்தை செய்து வாருங்கள்.

 சமீபத்திய ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்து வருவோருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவதாக தெரிய வந்துள்ளது. ஆகவே மாரடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் இரத்த தானம் செய்யுங்கள்.

 உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகமாகும் போது, கல்லீரல் செயலிழப்பு மற்றும் கணைய பாதிப்பு போன்றவை ஏற்படும். ஆனால் இரத்த தானத்தை ஒருவர் செய்து வரும் போது, உடலில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து வெளியேற்றப்பட்டு, கல்லீரல் மற்றும் கணைய பாதிப்பு ஏற்படுவது குறையும்.

 அடிக்கடி இரத்த தானம் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்குமாயின், பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

 இரத்த தானம் செய்வதால், உடலில் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும். இதனால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயமும் குறையும்.

 இரத்த தானம் செய்யும் செய்யும் போது, மனதில் மற்றவருக்கு உதவிய சந்தோஷம் மற்றும் திருப்தி கிடைத்து, மனதில் ஒருவித மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடும்.

 இரத்த தானம் செய்வோரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். இரத்த தானம் செய்வோர் 18 வயது நிரம்பியராகவும், 60 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு நோய்த்தொற்றும் இல்லாதவராக இருக்க வேண்டும்.  இரத்த ஹீமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும், 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

 ஒரு ஆண் மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம். அதேப் போல் ஒரு பெண் 4 மாதங்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments