போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு!



ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆணைக்கிணங்க அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி 11-08-2022 காலை 10.30 மணியளவில் எடுக்கவேண்டும் எனவும் 12-08-2022 முதல் 19-08-2022 முதல் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கவும் மதிப்புமிக்க பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது. 
அந்த வகையில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். ஆவுடையார்கோவில் காவல் நிலைய  உதவி ஆய்வாளர் கூத்தப்பெருமாள் முன்னிலை வகித்தார். ஆவுடையார்கோவில் காவல் ஆய்வாளர் இராமலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு போதைப்பொருளால் ஏற்படும் தீங்கு பற்றியும் அதை தடுப்பது பற்றியும் எடுத்துக்கூறி உறுதிமொழியை வாசித்தார். இதனை 502  மாணவ, மாணவிகளும் , உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் உள்பட அனைத்து ஆசிரியர்களும் எடுத்துக் கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments