சவூதி அரேபியா இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டல நியூ செனையா கிளை நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்!!!
    76-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சவூதி அரேபியா ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர்  ஃபோரம் (IWF) - நியூ செனையா கிளை மற்றும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) இணைந்து இரத்ததான முகாம் 05/08/2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நியூ செனையா பார்க்கில் சிறப்பாக நடைபெற்றது.

முகாமை கிளை நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் இணைந்து துவங்கி வைத்தனர்.

மிக குறுகிய கால இடைவெளியில் இரத்ததான முகாமிற்கான அறிவிப்பு செய்தவுடன் அயராத உழைப்பாலும், தொடர் அழைப்பு பணியாலும் இறைவனின் கிருபையாலும் இந்த முகாமில் 70-க்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர். மேலும் நேரமின்மை காரணமாகவும், இரத்த வங்கியில் ஏற்பட்ட மருத்துவ உபகரணங்களின் பற்றாகுறையின் காரணமாகவும் இன்னும் பல சகோதரர்கள் இரத்ததானம் செய்ய முடியாமல் வருத்தத்துடன் திரும்பி சென்றனர்.

முகாம் வெற்றிகரமாக நடைபெற்றதற்காக களப்பணியாற்றிய சகோதரர்களுக்கும், காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்து தந்த சகோதரர்களுக்கும், வாகன ரீதியாக உதவி செய்த சகோதரர்களுக்கும் , ஊடக ரீதியாக உதவிய சகோதரர்களுக்கும், மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும், செயற்குழு மற்றும் பொதுகுழு உறுப்பினர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும், நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

உங்கள் அனைவரது உழைப்பையும் பங்களிப்பையும் எல்லாம் வல்ல அந்த ஏக இறைவன் அங்கீகரித்து நன்மைகளை வழங்கி அருள் புரிவானாக!

முகாமிற்கான பொருளாதார பங்களிப்பு வழங்கிய சமுது இன்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் பொறியாளர் பைசல் அவர்களுக்கு IWF - நியூ செனையா கிளை மற்றும் ரியாத் மண்டலம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிப்பதுடன் அவரது தொழிலில் பரக்கத் வழங்கி இறைவன் அருள் புரிவானாக!

முகாமில் சிறப்பு அம்சமாக திருப்பூண்டியை சேர்ந்த முஹம்மது யூசுப் எனும் சகோதரர் IWF - உடன் இணைந்து சமுதாய பணியாற்ற தன்னை இணைத்து கொண்டார்.

இறுதியாக IWF மண்டல துணைத் தலைவர் மெளலவி இப்ராஹிம் அன்வாரி அவர்கள் நசியத் வழங்க, மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்களும் மற்றும் கிளை தலைவர் அபுஹுரைரா அவர்களும் அனைவருக்கும் நன்றியுரையாற்ற முகாம் இனிதே நிறைவடைந்தது.
என்றும் சமுதாய பணியில் கடல் கடந்து
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ( IWF )
மத்திய மண்டலம் 
ரியாத் - சவூதி அரேபியா
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments