திமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொருளாளராக கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த J.அபுதாஹிர் நியமனம்!!




திமுக தலைமை, அதன் 72 நிர்வாக மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் பட்டியலை நேற்று அறிவித்தது. அதன்படி திமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொருளாளராக கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த J.அபுதாஹிர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.திமுகவின் 15-வது உள்கட்சித்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதல் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளராக சட்டத்துறை அமைச்சரும், திருமயம் எம்.எல்.ஏ-வுமான S.ரகுபதி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதுபோல் நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த J.அபுதாஹிர் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக பொருளாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments