அறந்தாங்கியில் இருந்து திருச்சிக்கு உடும்புகளை கடத்த முயன்ற 2 பேர் கைது!!அறந்தாங்கியில் இருந்து திருச்சிக்கு கடத்த முயன்ற 20 உடும்புகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாக்கு மூட்டையுடன் 2 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் திருச்சி செல்லும் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். இதைப்பார்த்த தனிப்பிரிவு போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அறந்தாங்கியில் இருந்து திருச்சிக்கு கடத்த முயன்ற உடும்புகள்

மேலும் சாக்கு மூட்டையில் என்ன உள்ளது என்று போலீசார் கேட்டனர். அதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் சாக்கு மூட்டையை சோதனை செய்த போது அதில் உடும்புகள் கடத்தி வந்தது ெதரியவந்தது. மேலும், அவர்கள் அறந்தாங்கி கூத்தாடிவயலை சேர்ந்த ரஜினி மாதவன் (வயது 36), மாதவன் (30) என்பதும், இவர்கள் சாக்கு மூட்டையில் 20 உடும்புகளை பிடித்து திருச்சிக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறையினர் 20 உடும்புகளை கைப்பற்றி வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிந்து ரஜினி மாதவன், மாதவன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments