புதுக்கோட்டை வழியாக திருவனந்தபுரம் சென்ட்ரல் - சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
 புதுக்கோட்டை வழியாக திருவனந்தபுரம் சென்ட்ரல் -  சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: 

ரயில் எண் 06054 திருவனந்தபுரம் சென்ட்ரல்- சென்னை தாம்பரம் சிறப்பு ரயில் வரும் 5ம் தேதி புதன்கிழமை பகல் 12 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு இரவு 08.43 மணிக்கு வந்து 08.45 மணிக்கு புறப்படும் பின்னர் தாம்பரத்திற்கு மறுநாள் காலை 6 மணிக்கு சென்றடையும்.

மறு மார்க்கத்தில் ரயில் எண் 06053 தாம்பரம் - திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில் அக்டோபர் 6ம் தேதி வியாழக்கிழமை தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு இரவு 10.43 மணிக்கு வந்து 10.45 மணிக்கு புறப்படும்  மறுநாள் வெள்ளிக்கிழமை  காலை 7.40க்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்றடையும்.

இந்த ரயில் குழித்துறை நாகர்கோவில்  வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments