புதுக்கோட்டையில் மாபெரும் விவசாய கண்காட்சி லேனா திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. கண்காட்சியை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். தொடர்ந்து கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார். கண்காட்சியில் பாரம்பரிய நெல் விதைகள், நாற்று உற்பத்தி, நவீன வேளாண் கருவிகள், டிராக்டர்கள், நிலக்கடலை விதை விதைப்பு கருவிகள், பண்ணை உபகரணங்கள், இயற்கை இடு பொருட்கள், கால்நடை வளர்ப்பு முறை, தோட்டக்கலை தொழில்நுட்பங்கள், சொட்டுநீர் பாசனம், வேளாண் நவீன தொழில்நுட்பங்கள், உணவு பதப்படுத்தும் முறை உள்பட விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான அரங்குகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 45-க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளது. இதில் விதை உள்பட வேளாண் பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன.
நகராட்சியின் தயாரிப்பான அடி உரமும் விற்பனை செய்யப்படுகிறது. கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம் என்பதால் பொதுமக்கள், விவசாயிகள் அதிகம் பார்வையிட்டு வருகின்றனர். கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். கண்காட்சி நாளையுடன் (திங்கட்கிழமை) முடிவடைகிறது. கண்காட்சி தொடக்க விழாவில் தி.மு.க. நகர செயலாளர் செந்தில், கவுன்சிலர் மூர்த்தி, விவசாயிகள் சங்க பொது செயலாளர் தனபதி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கீரின் குளோபல் நிறுவனத்தின் உரிமையாளர் விநாயகமூர்த்தி செய்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.