முத்துப்பேட்டையில் இராமேஸ்வரம் - செகந்திராபாத் ரயிலில் அடிபட்டு 4 ஆடுகள் பலி 

  
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ரெயிலில் அடிபட்டு 4 ஆடுகள் உயிரிழந்தன.

செகந்திராபாத்- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
 
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வழியாக காலை மற்றும் மாலை இரு நேரங்களில் திருவாருர்- காரைக்குடி பாசஞ்சர் ரயில் சென்று வருகிறது.இதே வழித்தடத்தில் செகந்திராபாத் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் ஒருமுறை வந்து செல்கிறது. இந்த ரயில்களில் அடிக்கடி கால்நடைகள் அடிபட்டு உயிரிழக்கின்றன.

இந்தநிலையில் இப்பகுதியில் வாரம் ஒருமுறை வந்து செல்லும் செகந்திராபாத்- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு மதியம் 1.45 மணிக்கு முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை கடந்து சென்றது. 

4ஆடுகள் சாவு அப்போது தண்டவாளத்தில் படுத்து கிடந்த 4 ஆடுகள் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. 2 ஆடுகள் காயமடைந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.உயிரிழந்த ஆடுகளுக்கு யாரும் சொந்தம் கொண்டாடாத நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆடுகளை எடுத்து சென்றனர்.

ரயில் தண்டவாளத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் 

ரயில் தண்டவாளத்தில் யாரும் அஜாக்கிரதையாக கடக்கக் கூடாது. தண்டவாள பாதையில் ஆடு, மாடுகள் போன்றவற்றை மேய்க்க கூடாது. விதிமுறைகளை மீறி விரோதமான செயலில் ஈடுபடும் நபர்கள் மீது ரெயில்வே  சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால் பொதுமக்கள் அனைவரும் தண்டவாளத்தை கவனமுடன் கடக்க வேண்டும். பாதுகாப்புடன் இருக்க வேண்டும்

இருப்புபாதை அருகே பொதுமக்கள் செல்வதையோ, தண்டவாளங்களை கடப்பதையோ, கால்நடைகளை இருப்புபாதை அருகே மேய்ச்சலுக்கு விடுவதையோ தவிர்க்க வேண்டும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments