மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி கொடுக்கும் கருத்தாளர்களுக்கான பயிற்சி!



மணமேல்குடி ஒன்றியத்தில் நேற்று இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி கொடுக்கும் கருத்தாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இப்பயிற்சியினை வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமை வகித்தார். இந்திராணி மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்பயிற்சியில் நான்கு மையங்களில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து கருத்தாளர்களுக்கு முன் ஏற்பாடுகள் செய்வதற்கும் கற்பித்தலில் மாணவர்களுக்கு முன் தீர்வு நடத்துவது பற்றியும் பின்தேர்வு நடத்துவதை குறித்து விளக்கம் வழங்கப்பட்டது.

கற்றல் கற்பித்தலில் பின்தங்கிய மாணவர்களுக்கு அவர்களின் கற்கும் திறனை அறிந்து குறைதீர் கற்பித்தல் பயிற்சி தன்னார்வலர்களுக்கு வழங்குவது தொடர்பாக அனைத்து கருத்துகளையும் தெளிவாக பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில் ஆசிரியர், பயிற்றுநர் வேல்சாமி மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

இப்பயிற்சியில் ஆசிரியர், பயிற்றுநர்கள் மற்றும் கருத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments