சுரங்க பாதை பேருந்து, லாரி உள்ளிட்ட எந்த கனரக வாகனங்களும் செல்ல முடியாமல் விபத்து நேரும் வகையில் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடி செல்லும் ரயிலை மறிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே 132 c சொர்ணக்காடு ரயில்வே பாதை உபயோகிப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் சொர்ணக்காடு தனியார் திருமண மஹாலில் வளப்பிரமன்காடு ஊராட்சி மன்ற தலைவர் சி.கணேசன் தலைமையில் நடைபெற்றது.
காரைக்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் அகல ரயில் பாதையில் பேராவூரணி அருகே சொர்ணக்காடு கேட் எண் 132 சி, பல கிராமங்களை இணைக்கும் சாலையாகும். ரயில்வே நிர்வாகம் கேட்டை நீக்கி, ரயில்வே சுரங்கப்பாதையாக மாற்றம் செய்தனர். ஆனால் இந்த சுரங்க பாதை பேருந்து, லாரி உள்ளிட்ட எந்த கனரக வாகனங்களும் செல்ல முடியாமல் விபத்து நேரும் வகையில் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக பலமுறை ரயில்வே நிர்வாகத்திலும் எடுத்துக் கூறியும் சரியாக கட்டி தருவதாக கூறி இறுதியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தவறாக வடிவமைத்து தரை கீழ் பாலம் கட்டியுள்ளனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுமார் 5 அடி அளவிற்கு மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த ரயில்வே சுரங்கப்பாதையில் எந்த வாகனமும் செல்ல முடியாத அவல நிலை உள்ளது. சொர்ணக்காடு ரயில்வே சுரங்கப்பாதை தவறாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் கட்டப்பட்டுள்ளது.
ரயில்வே பாதையை பயன்படுத்தும் சொர்ணக்காடு, வலப்பிரமன்காடு, மாத்தூர் ராமசாமிபுரம் ஊராட்சிகளை சேர்ந்த பாலகிருஷ்ணாபுரம், பனஞ்சேரி ஆகிய ஊர்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வது எனவும், எதிர்வரும் டிசம்பர் 9ஆம் தேதி காலை 9 மணி அளவில் அனைத்து ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்களை திரட்டி மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடி செல்லும் ரயிலை மறிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என போராட்டக் குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சொர்ண க்காடு விஜயபாஸ்கரன், மணக்காடு விஜயகுமார், மாத்தூர் ராமசாமிபுரம் பழனி முருகன், ஒன்றிய கவுன்சிலர் ரஜினி ராஜா மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.