சவூதி அரேபியா செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இனி காவல்துறை நற்சான்றிதழ் (PCC) தேவையில்லை.!!சவூதி அரேபியாவுக்கு (வேலை) விசாவில் செல்பவர்களுக்கு போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட்(PCC) கட்டாயம் வாங்க வேண்டும், PCC வாங்கிய பிறகுதான் விசா ஸ்டாபிங் செய்யப்படும் என்ற நடைமுறை இருந்து வந்தது.

இந்த நடைமுறையை இன்று முதல் 17-11-2022 சவுதிக்கு செல்பவர்கள் பிசிசி வாங்க வேண்டிய அவசியமில்லை என்று இந்தியாவில் (புது டெல்லியில்) அமைந்துள்ள சவுதி தூதரகம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவுக்கு வேலை நிமித்தமாக செல்லக்கூடியவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது.

குறிப்பு: இந்த அறிவிப்பு டெல்லியில் உள்ள சவுதி தூதரகம் மூலம் விசா ஸ்டாம்பிங் செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்படுகிறது.


இந்தியாவில் (மும்பையில்) அமைந்துள்ள மற்றொரு சவூதி அரேபியாவின் தூதரகத்தில் விசா ஸ்டாபிங் செய்பவர்களுக்கு பொருந்தாது என்றும் நம்பத் தகுந்த ஏஜென்சி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் விரைவில் மும்பையில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்திலும் இதுபோன்ற செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments