நவம்பர் 19-ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்-தமிழக அரசு அறிவிப்பு..!தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் வரும் சனிக்கிழமை (நவம்பர் 19-ம் தேதி) செயல்படும் என தமிழக அரசு சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையடுத்து, தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வர ஏதுவாக அக்டோபர் 25-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. 

அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வருகின்ற சனிக்கிழமை (நவம்பர் 19-ம் தேதி) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments