தொண்டியில் குப்பை சேகரிக்க 7 மின்கல வாகனங்கள் தொடக்கம்
தொண்டி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளை சேகரிக்க 7 மின்கல வாகனங்கள் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

கலைஞா் நகா்ப் புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொது சுகாதாரப் பயன்பாட்டுக்கு 7 மின்கல வாகனங்களை பேரூராட்சித் தலைவா் ஷாஜகான் பானு ஜவஹா் அலிக்கான் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சி துணைத் தலைவா் அழகு ராணி ராஜேந்திரன், திமுக நகரச் செயலாளா் இஸ்மத்நானா, தொண்டி பேரூராட்சி செயல் அலுவலா் செல்வராஜ், மன்ற உறுப்பினா்கள், பேரூராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments