ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்




ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி தலைமை தாங்கினார். ஒன்றிய துணை தலைவர் பிரியா குப்புராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பூர்செந்தில்குமரன், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வந்துள்ளதா, எனது கவுன்சிலில் உள்ள பள்ளிகளை இடித்ததற்கு பதில் எழுநூற்றி மங்களம், பாண்டி பத்திரம் ஆகிய 2 பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா என்று கோரிக்கை வைத்தார்.

ஒன்றியக்குழு உறுப்பினர் பொன்பேத்தி சுந்தரபாண்டியன், தற்போது மழை காலம் என்பதால் ஏரியில் உள்ள மடைகள் நிறைய இடத்தில் பழுதாக உள்ளது. அவற்றை சீரமைத்து தரவேண்டும் என்றார். ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுந்தரி கூத்தையா, எனது கவுன்சிலில் பழுதடைந்துள்ள பல்வேறு சாலைகளுக்கு சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும் என்றார். ஒன்றிய குழு உறுப்பினர் அய்யா ரமேஷ், தற்பொழுது அனைத்து பகுதிகளிலும் வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கு ஆங்காங்கே கணக்கெடுப்பு பணிகள் நடந்து கொண்டு வருகிறது. நமது ஒன்றியத்தில் அந்த பணி இன்னும் தொடங்கவில்லை என்று கூறினார். அதற்கு பதிலளித்த ஒன்றிய ஆணையர் தமிழ்ச்செல்வன், இது சம்பந்தமாக வேலைகள் நடைபெற்றுக்கொண்டு உள்ளது என்று கூறினார். கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய அலுவலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தீர்மானங்களை ஒன்றிய அலுவலர் முருகையா வாசித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments