தாழனூர் ஊராட்சி கூடலூர் கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி
ஆவுடையார்கோவில் ஒன்றியம், தாழனூர் ஊராட்சியில், கூடலூர் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் நேற்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் தலைமையில், தாழனூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்து காமாட்சி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் சிவசங்கர், மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில், 1,300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் விஸ்வநாதன், கூடலூர் முத்து மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments