அறந்தாங்கியில் தமுமுக நடத்திய டிசம்பர்-6 வழிபாட்டுரிமை பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!அறந்தாங்கியில் தமுமுக சார்பில் டிசம்பர்-6 வழிபாட்டுரிமை பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டிசம்பர்-6 வழிபாட்டுரிமை பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுக்கோட்டை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக அறந்தாங்கியில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் சேக் தாவுதீன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் அப்துல் கனி வரவேற்புரை ஆற்றினார், தமுமுக மாநிலச் செயலாளர் சாதிக் பாட்ஷா மற்றும் தலைமைக் கழக பேச்சாளர் மௌலவி அப்துல் ரஹ்மான் தாவூதி சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று வழிபாட்டுரிமைப் பாதுகாப்புக்கு வலிமை சேர்த்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments