கோட்டைப்பட்டினத்தில் SDPI கட்சி நடத்திய டிசம்பர் 06 ஃபாசிச எதிர்ப்பு தினம் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம்!டிசம்பர் 6 பாபர் மசூதி தகர்க்கப்பட்ட தினம் "ஃபாசிச எதிர்ப்பு தினம்" SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக கோட்டைப்பட்டினத்தில் மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டிணத்தி SDPI கட்சி சார்பாக ஆர்ப்பாட்டத்தை புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் U.செய்யது அவர்கள் தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார், SDPI வர்த்தகர் அணியின் மாநில செயலாளரும் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளருமாகிய S.A.M.அரபாத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார். தெற்கு தொகுதி துணை தலைவர் பசீர் அஹமது தொகுத்து வழங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இமாம் R.ஹஸ்ஸான் பைஜி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் மு.வீரகுமார் அவர்களும் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.

மேலும் அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் அக்பர் அலி மற்றும் SDPI கட்சி மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள், SDTU நிர்வாகிகள், WIM நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர்.

ஆர்பாட்டத்தில் தொண்டர்கள், ஜமாத்தார்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இறுதியாக மாவட்ட செயலாளர் F.சாலிகு அவர்கள் நன்றியுரை ஆற்றினார். 

தகவல்:
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments