தற்போதைய நிலவரப்படி மாமல்லபுரத்தை நெருங்கியது மாண்டஸ் புயல்... கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்






மாமல்லபுரத்தை நெருங்கியது மாண்டஸ் புயல்... கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்


தற்போதைய நிலவரப்படி, மாமல்லபுரத்தில் இருந்து 70 கிமீ தென்கிழக்கில் மாண்டஸ் புயல் உள்ளது. சென்னையில் இருந்து 110 கிமீ தொலைவில் உள்ளது. மணிக்கு 14 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி புயல் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் பலதத் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 

நாளைய தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மாண்டஸ் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments