அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரையில் கடல் உள்வாங்கியது






அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரையில் கடல் உள்வாங்கியது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

கடல் உள்வாங்கியது

அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரையில் நேற்று காலை திடீரென 200 மீட்டர் தூரம் கடல் உள்வாங்கியது. இதனால் கடல் நீர் பெருக்கெடுத்து துறைமுக வாய்க்காலை எட்டியது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் அச்சமடைந்தனர். கடந்த கஜா புயலின் போது கடல் நீர் பெருக்கெடுத்து துறைமுக வாய்க்கால் வழியாக குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்து வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.

தற்போது கடல் நீர் பெருக்கெடுத்து துறைமுக வாய்க்காலை எட்டியுள்ளதால் மீண்டும் கஜா புயல் போல் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் கரையோரம் வசிக்கும் மக்கள் உள்ளனர்.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை மூலம் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம் கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு நேற்று மீன்பிடிக்கச்செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக துறைமுக வாய்க்காலில் கட்டி வைத்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments