கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை





 கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். (டிசம்பர் 25) தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை இன்னும் முழுமையாக பெய்யவில்லை. போதிய மழை இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் கோபாலப்பட்டிணம் பகுதிகளில்  காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.குளிர்ந்த காற்றும் குளிர்ச்சியான சூழலும் நிலவி வந்தது. காலை முதல்   இரவு வரை அவ்வபோது லேசான சாரல் மழை பெய்தது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments