திருத்துறைப்பூண்டி: புறவழிச்சாலை அமைக்கும் பணி அதிகாரிகள் ஆய்வு புறவழிச்சாலை பணிகள் ஜூன் 30-ந்தேதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்படும்




திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலை பணிகள் வருகிற ஜூன் 30-ந்தேதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்படும் என சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் தெரிவித்தார்.

நெடுஞ்சாலை பணி ஆய்வு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் பாலத்தில் இருந்து நாகை பைபாஸ் சாலை வரை 2.6 கிலோமீட்டர் தூரம் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்ட ராமன் பாா்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து புறவழிச் சாலையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

ஜூன் 30-ந்தேதிக்குள் முடிக்கப்படும்

பின்னர் அவர் கூறுகையில், தற்போது திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலையில் 19 பாலங்கள் கட்டப்பட்டு மண் நிரப்பப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 4 அடுக்குகள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் வருகிற ஜூன் மாதம் 30-ந்தேதிக்குள் முழுவதும் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

இந்த ஆய்வின் போது மாரிமுத்து எம்.எல்.ஏ., திருச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி,திருவாரூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் இளம்வழுதி, உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து, இளநிலை பொறியாளர் ரவி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இது குறித்து திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து MLA வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில் 

திருத்துறைப்பூண்டியில் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்  திருவாரூர் - நாகை சாலையை இடையே 2.6 கி.மீ புறவழிசாலை திட்ட பணிகள்1 நெடுஞ்சாலைத்துறை சார்பில் 13/05/2022  அன்று தொடங்கபட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. மழையால் சிறிது பணிகள் தேக்கம் ஏற்பட்டாலும் இந்த சாலையில் 19 சிறுப்பாலங்கள் (கல்வெட்டு) அமைக்கும் பணிகள் முடிவடைந்து அடுத்த கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.  

இதனை அடுத்து  (06/01/2022)  எனது முன்னிலையில் சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் திரு ரெ.கோதண்டராமன்,  திருச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளரும் உள் தணிக்கை அதிகாரியுமான முனைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வு முடிவில் வரும் ஜூன் மாதம் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தனர். மேலும் திருவாரூர், மன்னார்குடி முத்துப்பேட்டை சாலைகளை இணைக்கும் புறவழிச்சாலை திட்டம்2க்கான  ஆயத்த பணிகளை விரைவில் தொடங்கிடவும்  கேட்டுக்கொண்டேன்.

#புறவழிச்சாலை1_ஜூன்30
#புறவழிச்சாலை2_விரைவில்








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments