மணமேல்குடி அருகே மும்பாலையில் அரசு பேருந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்!



புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே, சாலையின் குறுக்கே வந்த நபர் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியபோது, அரசு பேருந்து பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

இன்று ஜன.22 காலை சுமார் 10:30 மணியளவில், பட்டுக்கோட்டையிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மணமேல்குடி அடுத்த மும்பாலை என்ற பகுதியில் பேருந்து வந்தபோது, எதிர்பாராத விதமாக நபர் ஒருவர் சாலையின் குறுக்கே வந்துள்ளார்.

அந்த நபர் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பேருந்தை இடதுபுறம் வேகமாக திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது.
 
பேருந்து பள்ளத்தில் இறங்கியதால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், ஓட்டுநரின் சாமர்த்தியமான செயல்பாட்டினால் பேருந்து கவிழாமல் நின்றது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் சாலையில் வந்த நபர் என யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து பயணிகளை பத்திரமாக மீட்டனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல்: ராஜா முகமது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments