கட்டுமாவடி அரசு பள்ளிக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கிய பொதுமக்கள்






கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்க ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி, பள்ளிக்கு தேவையான மைக்செட், பீரோ, யு.பி.எஸ்., இன்வெர்ட்டர், மின்விசிறிகள், அனைத்து வகையான விளையாட்டு பொருட்கள், விளையாட்டு வீரர்களுக்கான சீருடைகள் என பல்வேறு சீர்வரிசை பொருட்களை 2 வேன்களில் ஏற்றி கட்டுமாவடி கடை தெருவில் இருந்து மேள, தாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்தனர். அங்கு சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்த பொதுமக்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். பின்னர் சீர்வரிசை பொருட்களை ஆசிரியர்களிடம் அவர்கள் வழங்கினர். இதில் கல்வி வளர்ச்சி குழு தலைவர் காந்தி சுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சாதிக்பாட்ஷா, பைசல் அகமது, சேகர், மகேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments