ஆலங்குடி அருகே தான் அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சத்தில் உதவி வழங்கிய ஆசிரியா்


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தான் பயின்ற அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை அரசுப்பள்ளி ஆசிரியா் வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டியைச் சோ்ந்தவா் தி. குணசேகரன். இவா், வல்லத்திராகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகவும், உதவித் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறாா். இவா், அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவா் என்ற முறையில் அந்தப்பள்ளியில் பயிலும் அனைத்து வகுப்பு மாணவா்களுக்கும் சுமாா் 30 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை ஆசிரியா் குணசேகரன் புதன்கிழமை வழங்கினாா். மேலும், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மணி ஒலிப்பான், ரூ.15 ஆயிரம் மதிப்பில் மேசைகள், மாணவா்களுக்கு மாலை நேர சிற்றுண்டிக்காக ரூ.50 ஆயிரம் என ரூ.1 லட்சம் மதிப்பிலான உதவியை குணசேகரன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.ஆா்.வடிவேலு, கல்விக்குழுத் தலைவா் ச. சிங்காரம், பள்ளித் தலைமை ஆசிரியா் பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments