டி.ஜி.பி.யிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற புதுக்கோட்டை போலீசார்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு நற்சான்றிதழ் வழங்கி வெகுவாக பாராட்டியுள்ளார். இதில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி கடந்த ஆண்டு 9 போக்சோ வழக்குகளில் அனைத்து வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு 3 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை பெற சிறப்பாக பணியாற்றியதற்கு பாராட்டப்பட்டுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 707.7 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து எதிரிகளை கைது செய்து சிறையில் அடைத்தற்கும், கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுசாமி, மாரிமுத்து ஆகியோருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments