கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் தெரு குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்! கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்!! சரி செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!!!
கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் தெரு குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்! கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்!! சரி செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!!!

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வருகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை சரி செய்யாமல் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல்  இருந்து வருகிறது. எனவே குடிநீர் குழாயை சரி செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் உள்ள கோபாலப்பட்டிணம் கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்களுக்கு அரசு  மேல்நிலை பள்ளி அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குழாய் வழியாக குடிநீர் செல்கிறது. இந்நிலையில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வெளியேறி வருகிறது. இதனால் குடிநீர் வீணவது மட்டுமல்லாமல் வெளியேறி தேங்கி நிற்கும் நீரால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் கோபாலப்பட்டிணம் OHT ஆபரேட்டர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை சரி செய்யப்படவில்லை. 

எனவே உடைப்பு ஏற்பட்டிருக்கும் குழாயை உடனடியாக சரி செய்ய ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு தான் உடைப்பு ஏற்பட்டிருந்த இந்த குழாய் சரி செய்யப்பட்ட நிலையில் திரும்பவும் அதே பகுதியில் உடைப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments