அறந்தாங்கி - கட்டுமாவடி சாலையில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக பிப்ரவரி 24ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடல் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு 


 அறந்தாங்கி - கட்டுமாவடி சாலையில் உள்ள  ரயில்வே கேட் 155 பராமரிப்பு பணி காரணமாக  பிப்ரவரி 24ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடல் - ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

இதையொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ரெயில்வே கேட் மூடியிருக்கும். இதனால் இந்த பாதை வழியாக செல்லும் போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அறந்தாங்கி போக்குவரத்து காவல்துறையின் சார்பாக முக்கிய அறிவிப்பு 

இன்று 24.02.2023 வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டுமாவடி சாலையில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் 155இல் பராமரிப்பு பணி காரணமாகவும் அறந்தாங்கி நெடுஞ்சாலை துறை உட்கோட்டம் சாலை புதுப்பிக்கும் பணி காரணமாகவும் அறந்தாங்கி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 அதன்படி புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி மார்க்கமாக நகருக்குள் வரும் அனைத்து கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் வீரமாகாளி அம்மன் கோவில் ஆர்ச் வழியாகவும்,கட்டுமாவடி வழியாக செல்லும் வாகனங்கள் பேராவூரணி சாலை ஆண்டா கோட்டை வைரவயல் வழியாகவும்,கட்டுமாவடியிலிருந்து நகருக்குள்  வரும் வாகனங்கள் L.N. புரம்,விக்னேஸ்வரபுரம்  அக்னி பஜார் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது,

ஆகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்புத் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 இப்படிக்கு போக்குவரத்து காவல்துறை அறந்தாங்கி.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments