மணமேல்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

மணமேல்குடி அருகே மும்பாலை கிழக்கு  கடற்கரை சாலையில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் 20.02.2022 திங்கட்கிழமை இரவு 08.30 மணியளவில் ‌ புதுக்குடியில் இருந்து இடையாத்தி மங்களம் நோக்கி கொடிக்குளத்தை சேர்ந்த முகேஷ் கண்ணன் என்பவர் தனியார் நண்டு கம்பெனி வேனை ஒட்டி சென்று கொண்டிருந்தார். இடையாத்தி மங்களம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து இடையாத்தி மங்களம் பிரிவு சாலை நோக்கி திரும்பிய போது மணமேல்குடியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும் பழனிவேல் ஆகியோர்  ஒரு இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் மணமேல்குடி நோக்கி எதிரே வந்துள்ளனர். 

அப்போது, வேனும் இருசக்கர வாகனமும் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இருவரது உடலும் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும் விபத்து குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து அதிகம் ஏற்படுவதால் பொதுமக்கள் இடையே கவலையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments