கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சிகந்தர்வகோட்டையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 150 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு பெற்றோர்கள், தன்னார்வலர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஒன்று சேர்ந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பீரோ, நாற்காலிகள், அலமாரிகள், சுவர் கடிகாரம், தேசத்தலைவர்களின் படம், புத்தகங்கள், எழுது பொருட்கள், மேஜை போன்ற பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்கினர். பின்னர் அதனை கந்தர்வகோட்டை பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக மேள தாளங்கள் முழங்க பள்ளிக்கு கல்விச்சீராக கொண்டு வந்தனர். 

பள்ளிக்கு பல்வேறு பொருட்களை வழங்க சீர் எடுத்து வந்த பொதுமக்களை ஆசிரியர்களும், மாணவர்களும் பன்னீர் தெளித்து வரவேற்றனர். நிகழ்ச்சியில், கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை, ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், வணிகர்கள் மற்றும் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments