பராமரிப்பு பணிகள் காரணமாக அறந்தாங்கி கட்டுமாவடி செல்லும் சாலையில் ரெயில்வே கேட் மூடல்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து கட்டுமாவடி செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட் பராமரிப்பு பணிகள் காரணமாக நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி ரெயில்வே கேட் நேற்று மூடப்பட்டது. இதையொட்டி அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள்கள், கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் ஆண்டாக்கோட்டை வழியாக வைரிவயல் முனி கோவில் வழியாக சென்றன. மேலும் அங்கு 2 போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments