குற்றாலத்தில் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய வாலிபரை தனது கார் டிரைவராக நியமித்த தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்




குற்றாலத்தில் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய வாலிபரை தனது கார் டிரைவராக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நியமனம் செய்துள்ளார்.
பழைய குற்றாலம் அருவியில் இழுத்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய வாலிபரை தனது கார் டிரைவராக தூத்துக்குடி கலெக்டர் நியமித்தார்.

அருவியில் இழுத்து செல்லப்பட்ட சிறுமி

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் கடந்த டிசம்பர் மாதம் 29-ந்தேதி கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த நவநீதன் குடும்பத்தினருடன் குளித்தார். அப்போது அவரது 4 வயது பெண் குழந்தை ஹரிணி திடீரென்று அருவி தண்ணீரில் சுமார் 40 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து இழுத்து செல்லப்பட்டாள்.

அப்போது அங்கு குளித்து கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற வாலிபர், உடனே தண்ணீரில் இறங்கி சிறுமியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து விஜயகுமாருக்கு பாராட்டுகள் குவிந்தன.

கார் டிரைவராக நியமித்த கலெக்டர்

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சிறுமியை காப்பாற்றிய விஜயகுமாரை நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். மேலும் அவருக்கு வருங்காலத்தில் எந்த உதவி தேவையென்றாலும் தன்னை அணுகுமாறும் கூறினார்.

தொடர்ந்து விஜயகுமாரின் வேண்டுகோளை ஏற்று, அவருக்கு தற்காலிக டிரைவர் பணியை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். அதன்படி தூத்துக்குடி சிப்காட் நில அளவை பிரிவில் தற்காலிக ஓட்டுனராக நியமிக்கப்பட்ட விஜயகுமார், தொடர்ந்து கலெக்டரின் கார் டிரைவராக நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments