S.P.பட்டினம் ஜாமிஆ அல்-அன்வாருல் குத்ஸிய்யா அரபிக்கல்லூரியின் 8-ஆம் ஆண்டு ஒரே நாளில் முழு குர்ஆனையும் மனனமாக ஒப்புவிக்கும் மகத்தான சாதனை நிகழ்ச்சி!




        S.P.பட்டினம் ஜாமிஆ அல்-அன்வாருல் குத்ஸிய்யா அரபிக்கல்லூரியின் 8-ஆம் ஆண்டு விழாவாக ஒரே நாளில் முழு குர்ஆனையும் மனனமாக ஒப்புவிக்கும் மகத்தான சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது .

இராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டினத்தில்  05.03.2023 ஞாயிற்றுக்கிழமை காலை சுப்ஹு தொழுகையைத் தொடர்ந்து இரவு இஷா தொழுகை வரை ஏழு அமர்வுகளாக S.P.பட்டினம் பெரிய பள்ளிவாசலில், ஜாமிஆ அல்-அன்வாருல் குத்ஸிய்யா அரபிக்கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள் முழு குர்ஆனையும் மனனமாக பொதுமக்கள் முன்னிலையில் ஓதி சாதனைபுரிய உள்ளார்கள்.  இறையருளால் நமது ஜாமிஆவில் கடந்த ஏழு ஆண்டுகளில் இருபத்தொன்று மாணவர்கள் இவ்வரிய சாதனையை நிகழ்த்திக் காட்டி அல்ஹாஃபிழுல் ஃபாழில் சான்றிதழ்கள் பெற்று சிறப்படைந்திருக்கிறார்கள். 







அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு 2023-ஆம் ஆண்டு கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த அல்ஹாஃபிழ் R.நூருல்லாஹ் S/o. A.ராவுத்தர் நெய்னார் முஹம்மது,

 பாசிப்பட்டினத்தை சேர்ந்த மௌலவி அல்ஹாஃபிழ் R.ஷேக் அப்துல்லாஹ் குத்ஸி D.C.A., S/o.S.ரஹ்மத் அலி, 

S.P.பட்டினத்தை சேர்ந்த அல்ஹாஃபிழ் M.முஹம்மது கலீ முல்லாஹ் S/o. M.முஹம்மது பஷீர் ஆகிய மாணவர்கள் சாதனை புரிந்தார்கள் 

சாதனை ஹாஃபிழ்களை உருவாக்கிய மௌலானா அல்ஹாஃபிழ். M.அபூபக்கர் சித்தீக் தாவூதி ஃபாஜில் ரஷாதி ஹழ்ரத், தலைமை பேராசிரியர், ஹிஃப்ழு பிரிவு, S.P.பட்டினம். மௌலானா அல்ஹாஃபிழ் காரி. M.முஹம்மது இஃஜாஸ் ஃபாஜில் காஸிமி ஹழ்ரத், பேராசிரியர், ஹிஃப்ழு பிரிவு, மௌலானா அல்ஹாஃபிழ். M.செய்யிது அப்துல் காதிர் மிஸ்பாஹி அவர்கள் பேராசிரியர் ஹிஃப்ழு பிரிவு, S.P.பட்டினம் ஆகியோர் உயரிய சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட போற்றுதலுக்குரிய ஆசான் பெருமக்கள் ஆவார்கள். 

இப்படிக்கு: முதல்வர், நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 

புதிய மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2023 - 2024

ஜூம்ரா பிரிவு
* 8-ம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்
* குர்ஆன் ஷரீப் சரளமாக ஓதத் தெரிந்திருத்தல் வேண்டும் 

ஹிஃப்மு பிரிவு
* குர்ஆன் ஷரீப் சரளமாக ஓதத் தெரிந்திருத்தல் வேண்டும்

நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி

விண்ணப்பிக்கும் கடைசி நாள் நாள் 10.03.2023 வெள்ளிக்கிழமை

அன்புடன்...
ஜாமிஆ அல்-அன்வாருல் குத்ஸிய்யா அரபிக்கல்லூரி, S.P.பட்டினம்.
90949 65052, 99421 56334, 94871 15184, 97887 82717
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments