மீமிசல் அருகே ஏம்பக்கோட்டையில் மதரஸா ரஹுமா பரக்கத் மக்தப் & நிஸ்வான் நடத்திய முப்பெரும் விழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே ஏம்பக்கோட்டையில் மதரஸா ரஹுமா பரக்கத் மக்தப் & நிஸ்வான் நடத்திய 
முப்பெரும் விழா  

05.03.2023 ஞாயிற்றுக்கிழமை 06.03.2023 திங்கள்கிழமை (ஷாபான் பிறை 12. 13) இரண்டு நாட்கள்   N.S.A. திருமண மஹாலில் நடைபெற்றது.

முதலாம் ஆண்டு காரிஆ 

இரண்டாம் ஆண்டு முஅல்லமா பட்டமளிப்பு விழா 

மூன்றாம் ஆண்டு மக்தப் மதரஸா ஆண்டு விழா

முதல் நாள் முதல் அமர்வு:-

காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை மக்தப் மதரஸா ஆண்டு விழா நடைபெற்றது  ரஹூமா பரக்கத் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் ஜமாஅத் தலைவர், நிர்வாகிகள் மற்றும் உலமாப்பெருமக்கள் முன்னிலை வகித்தனர், மாணவ மாணவியரின் கிராஅத், பயான், ஹதீஸ், கேள்வி பதில், துஆக்கள் நிகழ்வுகள்  நடைபெற்றது 

முதல் நாள்‌ இரண்டாம் அமர்வு:- 

மாலை 3.30 மணி முதல் மஃரிப் வரை
முஅல்லமா சான்றிதழ் பெரும் மாணவிகளின்
சிறப்பு பயான் நிகழ்வுகள் நடைபெற்றது பெண்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது 

இரண்டாம் நாள் முதல் அமர்வு 

06.03.2023 திங்கள்கிழமை மாலை 5.15 மணி முதல் மகரிப் வரை -  உள்ளூர் மற்றும் வெளியூர் உலமாக்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் 

இரண்டாம் நாள் இரண்டாம் அமர்வு 

இரண்டாம் அமர்வு: இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை ரஹூமா பரக்கத் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர், நிர்வாகிகள் மற்றும் உலமாப்பெருமக்கள் முன்னிலை வகித்தனர்

மௌலவி ஹாபிழ் ஸப்ஆ காரி. A. முஹம்மது ருஷ்தீன் தாவூதி முதன்மை பேராசிரியர், ஜாமிஆ ஸபியூல் உலும் அரபிக்கல்லூரி, நம்புதாளை.கிராஅத் மற்றும் காரிஆ ஸனது வழங்கினார்கள் 

மௌலவி. Dr. M. சதீதுத்தீன் ஃபாஜில் பாகவி M.A., M.Phil., Ph.D., தலைமை இமாம் குராசானி பீர் மஸ்ஜித் முதல்வர், ஜாமிஆ அல்ஹுதா அரபிக்கல்லூரி, அடையாறு சென்னை முஅல்லமா ஸனது வழங்கி சிறப்புப் பேருரை ஆற்றினார்கள் 

வீடியோ : https://fb.watch/j5FPiIpE4Q/

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments