R.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ரமலானை முன்னிட்டு 37 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் கிட் வழங்கல்!



ஆர்.புதுபட்டினம் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ரமலானை முன்னிட்டு 37 ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே ஆர்.புதுபட்டினத்தில் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக கடந்த 5-ஆண்டுகளாக ஏழை குடும்பங்கள் நோன்பு வைக்க தேவையான மளிகை பொருட்கள் கிட் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் 6-வது ஆண்டாக ரூபாய் 121,580 மதிப்புள்ள மளிகை பொருட்கள் ஆர்.புதுப்பட்டினம் மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் வாசிக்க கூடிய சுமார் 37 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்கள் அடங்கிய கிட் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.

இதற்காக உடலாலும், பொருளாலும், மனதாலும் உதவி செய்த அனைவருக்கும் ஜஸாகல்லாஹூ ஹைரன். அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக ஆமீன்.

கெட்டவர்களை இறைவன் பட்டியலிடும் போது, அவர்கள் ஏழைகளுக்கு உணவளிக்குமாறு தூண்டவில்லை என்கிறான்..(அல்குர்ஆன் 69:34)

90:10. அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.

90:11. ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை. 

90:12. (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும். 

90:13. (அது) ஓர் அடிமையை விடுவித்தல்-

90:14. அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.

90:15. உறவினனான ஓர் அநாதைக்கோ,

90:16. அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்)

ஏழைகளுக்கு உணவளிப்பது இறைவனுக்கு உணவளிப்பதைப் போன்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மறுமை நாளின் விசாரணை பற்றிக் குறிப்பிடும் போது இந்தக் கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(மறுமை நாளில்) அல்லாஹ், ‘ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்கவில்லை’ என்பான். அதற்கு மனிதன், ‘என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?’ என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ‘உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியான் இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால் அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அதை என்னிடம் நீ கண்டிருப்பாய்’ என்று கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்-5021

தகவல்: கலந்தர் பாட்சா, தலைவர்-அல் அமீன் நற்பணி மன்றம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments