ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ரமலான் பிறை 13-க்கான கேள்விகள்!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் மூன்றாம் ஆண்டு ரமழான் மாத இணைய வழி இஸ்லாமியப் போட்டி ரமலான் பிறை 06 (29/03/2023) முதல் 25 (17/04/2023) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் 29/03/2023 ரமலான் பிறை-06 முதல் இணைய வழி இஸ்லாமியப் போட்டிக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

முக்கிய வேண்டுகோள்:
  • கேள்வி பதில் போட்டியின் முதல் நாளன்று எவ்வாறு தங்களுடைய பெயரையும், முகவரியையும் பதிவு செய்துள்ளீர்களோ அதுபோலவே தினமும் பதிவு செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
  • கேள்விக்கான பதிலை அளித்துவிட்டு SUBMIT  செய்து விட்டீர்களா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.
  • நீங்கள் SUBMIT செய்துவிட்டு மீண்டும் ஒருமுறை கேள்விக்கான Link-ஐ கிளிக் செய்து சோதித்து பார்த்துக் கொள்ளவும் . நீங்கள் SUBMIT செய்திருந்தால் "You have already answered this question" என்று வரும் இல்லையென்றால் மீண்டும் பதிலை அளித்துவிட்டு SUBMIT  செய்யவும்.
பிறை 13-க்கான கேள்விகள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதில் அளிக்கவும்.


குறிப்பு: கேள்விக்கான பதிலை இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

பிறை-12 கேள்விக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்று பதில் அளித்த அனைவரும் தாங்கள் பதில்களை சரியாக தேர்வு செய்திருக்கிறோமா என்று சரி பார்த்து கொள்ளுங்கள்.

1. கொலையை விட மிக கொடியது எதுவென குர்ஆன் குறிப்பிடுகறது?

குழப்பம் செய்வது✅

 2. முதன் முதலில் அமீருல் முஃமினீன் என்று எந்த ஷஹாபிக்கு சொல்லப்பட்டது?

உமர் (ரலி)✅

3. இந்த சூரா ஓதப்படும் வீட்டிலிருந்து செய்த்தான் ஓடி விடுகிறான் என நபியவர்கள் எந்த சூராவை குறிப்பிட்டார்கள்?

சூரா அல் பகரா ✅

4.குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி நன்மை கிடைக்கும் சூரா எது?

சூரா அல் இக்லாஸ்✅

 5. மன்னு சல்வா என்ற உணவை எந்த சமுதாயத்திற்கு அல்லாஹ் இறக்கி வைத்தான்.?

Ans: மூஸா நபி சமுதாயம் _ பனூ இஸ்ராயீல்

இந்தப் போட்டியை குறித்து ஏதேனும் கருத்துக்கள் மற்றும் வேண்டுகோள் இருந்தால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிவிக்கவும்…


இந்த போட்டியை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments