கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆழ்குழாய் மின் மோட்டார் பழுது
கந்தர்வகோட்டை தாலுகா ஆத்தங்கரைவிடுதி ஊராட்சி, கீழ வாண்டான்விடுதி கிழக்கு தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஆழ்குழாய் மின் மோட்டார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்தது.
இதனால் ஆழ்குழாய் மோட்டாரை சீரமைப்பதாக கூறி ஊராட்சி நிர்வாகம் சார்பில் குழாய்களை அகற்றினர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அருகே உள்ள கிராமத்திற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் அந்த கிராமத்திலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கீழவாண்டான்விடுதி மக்களுக்கு சரிவர குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும் புதுக்கோட்டை- கறம்பக்குடி சாலையில் புதுப்பட்டி கிராமத்தில் காலிக்குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.