கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் அதிகாலை வரை மிளிரிந்து காணப்பட்ட பௌர்ணமி




 கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் அதிகாலையில் மேற்கு திசையில் மிளிர்வோடு தென்பட்ட பௌர்ணமியின் அழகிய காட்சிகள் 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம்   மீமிசல் கோபாலப்பட்டிணத்தில்  இன்று ஏப்ரல் 06‌ 2023 வியாழக்கிழமை அதிகாலை 05.00 மணியளவில் மேற்கு திசையில் பௌர்ணமி நிலவில் ரம்மியமாக காட்சி அளித்தது.

பௌர்ணமி என்றால் என்ன ?

முழுநிலவு, முழுமதி அல்லது பவுர்ணமி என்பது புவியில் இருந்து காணும் போது நிலவு முழுமையான வெளிச்சத்துடன் தோற்றமளிக்கும் நாளாகும். வானியலின்படி, கதிரவன் மற்றும் நிலவிற்கு இடையே புவி வரும் நாளே முழுநிலவு ஆகும். அப்போது கதிரவனின் வெளிச்சம் நிலவின் முற்பக்கத்தின் மீது முழுமையாகப் பதிகிறது. ஆகவே அது ஒளிர்ந்து புவியில் இருந்து காணும்போது வட்ட வடிவில் காட்சியளிக்கிறது. அப்போது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கம் இருளாக இருக்கும்.

நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி அளவுக்குச் சாய்வாக இருக்கிறது. எனவே முழுநிலவு நாளன்று பெரும்பாலும் புவியின் நிழல் நிலவின் மீது விழுவதில்லை. அவ்வாறு விழும்போது ஏற்படும் நிகழ்வே நிலவு மறைப்பு ஆகும். முழுமையான நிலவு மறைப்பின் போது ராலே ஒளிச்சிதறல் காரணமாக நிலவு சிவப்பு நிறத்தில் தோற்றமளிப்பதால் அது சிவப்பு நிலவு என்றும் குருதி நிலவு என்றும் அழைக்கப்படுகின்றது







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments