தொண்டியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க திருவாடானை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் எம்.எல்.ஏ.விடம் தொண்டி பேரூராட்சி தலைவர் கோரிக்கை .






ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல்நிலை பேரூராட்சி பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நிலவும் கடும் வெப்பத்தால் வழக்கமாக வழங்கப்படும் குடிநீரின் அளவை விட மிகக்குறைந்த அளவே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை தடையின்றி வழங்க தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கரு.மாணிக்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

தொண்டி பேரூராட்சி பகுதியில் சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள் பொருத்தவும், மீன் வளத்துறைக்குச் சொந்தமான இடத்தில் முன்பு செயல்பட்டு வந்த ஐஸ் பிளாண்ட்டை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். தொண்டி ஜெட்டி பாலத்தை சீரமைக்கவும், தொண்டியை தனி தாலுகாவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டி-மதுரை சாலையில் உள்ள செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி உட்புறம் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும், புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தர வேண்டும், தொண்டி பேரூராட்சிக்கு சொந்தமாக சேந்தனி போர்வெல் பழுதடைந்துள்ளதால் அதன் அருகில் புதிதாக போர்வெல் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.எல்.ஏ.விடம் மனுவை வழங்கினர்.

அப்போது தொண்டி நகர காங்கிரஸ் தலைவர் காத்தராஜா, தி.மு.க. செயலாளர் இஸ்மத் நானா ஆகியோர் உடனிருந்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments