ஜெகதாப்பட்டினத்தில் ஏப்ரல் 14 திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு
ஜெகதாப்பட்டினத்தில் ஏப்ரல் 14 திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது 

கடலூர், நாகப்பட்டினம் தொடங்கி தூத்துக்குடி வரை உள்ள மீனவர்கள் ஒவ்வொரு முறை கடலுக்குச் செல்லும் போதும் அச்சத்துடனையே தங்கள் தொழிலை நடத்த வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காணவும், மீனவர்கள் உரிமையை மீட்டெடுக்கவும், அவர்களின் நலன்களை காக்கவும் வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா  ஜெகதாப்பட்டினத்தில் செல்லனேந்தலில் ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 6 மணியளவில்  திராவிடர் கழகத்தின் சார்பில் மாநாடு நடத்தப்படவுள்ளது.

 தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மீனவர்களும், அனைத்துக் கட்சிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்று, மீனவர் நலன் காக்க ஒருமித்த குரல் கொடுக்க முன்வருமாறு கடமை உணர்வுடன் அழைக்கின்றோம். 

ஏற்பாடு : திராவிடர் கழகம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments