நாகப்பட்டினம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு தம்பிக்கோட்டை முக்கூட்டு சாலையில் ரவுண்டானா அமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
நாகப்பட்டினம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு தம்பிக்கோட்டை முக்கூட்டு சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை

பட்டுக்கோட்டை- திருத்துறைப்பூண்டி மாநில நெடுஞ்சாலையும், நாகப்பட்டினம்- தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையும் தம்பிக்கோட்டை முக்கூட்டு சாலையின் திருப்பத்தில் சந்திக்கின்றன. இச்சந்திப்பில் தினசரி ஆயிரக்கணக்கான கார்கள், பஸ்கள், லாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் என இரவு பகல் எந்நேரமும் சென்று வருகின்றன.

கிழக்கு கடற்கரை சாலையில் சென்று வரக்கூடிய சுற்றுலா பஸ்கள், கார்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. அதுபோல் பட்டுக்கோட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்று வரக்கூடிய கார்கள், பஸ்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன.

ரவுண்டானா அமைக்க வேண்டும்

இதுஇப்பகுதி மக்களுக்கும், பாதசாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் தம்பிக்கோட்டை முக்கூட்டு சாலையில் உடனடியாக ரவுண்டானா அமைத்து தர வேண்டும். பட்டுக்கோட்டையிலிருந்து வரக்கூடிய ரோடு பகுதி நாகப்பட்டினம் நோக்கி செல்லக்கூடிய ஈ.சி.ஆர். ரோடு மற்றும் தூத்துக்குடி நோக்கி செல்லக்கூடிய ஈ.சி.ஆர் ரோடு என 3 பகுதிகளிலும் ரோட்டின் நடுவே தடுப்பு சுவர் சென்டர் மீடியன் பேரியர் அமைத்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாதவாறு பாதுகாப்பினையும் பலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments