ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் மூன்றாம் ஆண்டு ரமலான் மாத கேள்வி-பதில் நிகழ்ச்சி நிறைவு!அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்பட்டு வந்த மூன்றாம் ஆண்டு ரமலான் மாத கேள்வி-பதில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் மூன்றாம் ஆண்டு ரமழான் மாத இணைய வழி இஸ்லாமியப் போட்டி ரமலான் பிறை 06 (29/03/2023) முதல் 25 (17/04/2023) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் கடந்த 29/03/2023 ரமலான் பிறை-06 முதல் இணைய வழி இஸ்லாமியப் போட்டிக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் பிறை-20-வுடன் (நேற்று) நிகழ்ச்சி நிறைவு பெற்றது. 

வெற்றியாளர்களின் விபரம் பெருநாள் அன்று அறிவிக்கப்படும். முதல் மூன்று இடத்தை பிடிக்கும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினால் நடத்தப்பட்ட மூன்றாம் ஆண்டு ரமலான் மாத கேள்வி-பதில் நிகழ்ச்சில் தொடர்ந்து பதில் அளித்தும், ஆதரவு தந்தமைக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.

இதில் அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் சுமார் 200-க்கும் அதிகமான நபர்கள் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.மேலும் இந்த போட்டியில் நாங்கள் ஏதும் தவறு செய்திருந்தால் அல்லாஹ்விற்காக பொருந்திக் கொள்ளவும். இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய காலங்களில் சிறப்பாக கேள்வி-பதில் நிகழ்ச்சி நடத்த அனைவரும் துவா செய்யவும். 

பிறை-20 கேள்விக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்று பதில் அளித்த அனைவரும் தாங்கள் பதில்களை சரியாக தேர்வு செய்திருக்கிறோமா என்று சரி பார்த்து கொள்ளுங்கள்.

1.ஆகவே (ஹஜ்ஜுடைய பிரயாணத்திற்கு வேண்டியவற்றை ) தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக தயார் செய்யப்பட வேண்டியவற்றில் மிகச் சிறந்தது ____ஆகும்.

பயபக்தியே

2.ஆதமுடைய மக்களே.! உங்களுடைய மானத்தை மறைக்கக் கூடிய ஆடையையும், ____  நிச்சயமாக நாம் உங்களுக்கு இறக்கி வைத்துள்ளோம். மேலும் ____ எனும் ஆடைதான் மேலானதாகும்.

அலங்காரத்தையும், பயபக்தி

3.அவன் ____ , _____ உண்மையைக் கொண்டு படைத்துள்ளான்; அவர்கள் _____ விட்டும் அவன்
மிக்க மேலானவன்.

வானங்களையும், பூமியையும், இணைவைப்பவற்றை

4.அவற்றின் (கால்நடைகளின்) வயிற்றிலுள்ள ___ , ____  இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு ____ புகட்டுகிறோம்.

சாணத்திற்கும், இரத்தத்திற்கும், இனிமையானதாக

5.இவர் இந்த சமுதாயத்தின் நம்பிக்கைக் குறியவர் என நபியவர்கள் எந்த நபித் தோழரை குறிப்பிட்டார்கள்?

அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் 

6.ஒரு குடும்பத்தாரின் அனுமதியின்றி அவர்களது வீட்டினுள் யாரேனும் எட்டிப்பார்த்தால், இதை செய்வதற்கு அந்த வீட்டாருக்கு அனுமதி உண்டு என நபியவர்கள்  எதை சொன்னார்கள் ?

அவரது கண்ணைப் பறிக்க

7.இந்த வருடத்தின் கேள்வி பதில் போட்டியில் "தினமும் ஓர் ஹதீஸ் " அதற்கு பதிலாக  இரண்டு துஆக்களை பற்றி பதிவிட்டிருந்தோம். அது எதனைப் பற்றிய துஆ?

1.பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய துஆ
2.நேர்வழியில் இருப்பதற்கு கேட்க வேண்டிய துஆ

இந்தப் போட்டி குறித்து ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிவிக்கவும்.


இப்படிக்கு...
அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி (IYF),
R.புதுப்பட்டினம்.

தகவல்: கலந்தர் பாட்சா, தலைவர்-அல் அமீன் நற்பணி மன்றம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments