மஞ்சப்பை விருது பெற பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம் மே மாதம் 1-ந் தேதி கடைசி நாள்




`மீண்டும் மஞ்சப்பை' பிரசாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் இவற்றிற்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு மாநில அளவில் மஞ்சப்பை விருது வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3-ம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன் மாதிரியாகத் திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன் வந்துள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை கலெக்டர் அலுவலக இணையதளம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப படிவத்தில் தனிநபர் நிறுவனத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் 2 மற்றும் குறுவட்டு பிரதிகள் இரண்டினை கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி ஆகும். மேற்கண்ட தகவலை கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments