முத்துப்பேட்டை அருகே ரயில் விபத்து.. சிதறிய உடல்களை கண்டு நடுங்கிய மக்கள்.. துணிவுடன் மீட்ட தவ்ஹீத் ஜமாஅத்தினர்.. மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டு!
முத்துப்பேட்டை அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை  ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு பணி செய்தமைக்கு நாச்சிக்குளம் TNTJ நிர்வாகிகளுக்கு திருவாருர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நேரில் அழைத்து மனித நேய சேவையை பாராட்டி & கேடயம் வழங்கினார்

TNTJயின் மனித நேய சேவையை பாராட்டி திருவாருர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நேரில் அழைத்து கேடயம் வழங்கினார்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் கடந்த 24/04/2023 அன்று நடந்த ரயில் விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியாகினர். இச்சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ரயில் விபத்தில் பலியானவர்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறியது. உடல்களை மீட்க பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

அச்சமயம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்தது. நாச்சிக்குளம் பகுதியை சேர்ந்த தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தொன்டரணியினர் சிதறிய உடல்களை துணிச்சலுடன் மீட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். உடல்களை எடுக்க மக்கள் யாரும் முன்வராத நிலையில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.

தவ்ஹீத் ஜமாஅத்தினரின் இந்த மனிதநேய செயலை சமூக வலைத்தளங்களில் மக்கள் பாராட்டினார். இந்த நிலையில், இன்று (ஏப்.27) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் ADSP வெள்ளதுறை ஆகியோர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தொண்டர் அணியினரை நேரில் அழைத்து பாராட்டி கேடயம் வழங்கினர்.

விபத்தில் இறந்தவர்களின் அருகில் செல்ல பொதுமக்கள் அஞ்சி ஒதுங்கி நின்ற போது இவர்கள் செய்த மனிதநேய பணி பலரையும் புருவம் உயர்த்த செய்து பத்திரிக்கை செய்தியாகவும் வந்தது குறிப்பிடதக்கது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments