தமிழக பள்ளிகளுக்கு ஜனவரி 4 வரை விடுமுறை: மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!



தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 
முக்கிய அம்சங்கள்:
விடுமுறை காலம்
அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 24 (புதன்கிழமை) முதல் ஜனவரி 4 (ஞாயிற்றுக்கிழமை) வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
பள்ளி திறப்பு
விடுமுறைக்குப் பிறகு, ஜனவரி 5 (திங்கட்கிழமை) அன்று பள்ளிகள் மீண்டும் வழக்கம்போல் செயல்படும்.
 
​சிறப்பு வகுப்புகளுக்குத் தடை
விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எக்காரணம் கொண்டும் சிறப்பு வகுப்புகள் (Special Classes) நடத்தக்கூடாது என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெற்றோர்களுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்
விடுமுறை காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் பெற்றோர்களுக்குச் சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன

  • ​மாணவர்கள் நீர்நிலைகளான கடல், ஆறு, ஏரி மற்றும் குளங்களில் குளிப்பதைப் பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது.
  • ​மாணவர்களின் வளர்ச்சிக்குச் சத்தான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
  • ​இசை, நடனம், ஓவியம் போன்ற கலைகளில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அவற்றைக் கற்க வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
  • ​தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்களுடன் நேரம் செலவிடவும், அவர்களை மதிக்கவும் மாணவர்களுக்குப் பழக்க வேண்டும்.
இந்த அறிவுறுத்தல்களை அனைத்து தலைமை ஆசிரியர்களும் மாணவர்களின் பெற்றோர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments