மீமிசல் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய 'ROS' மினி பேருந்து!



மீமிசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கடந்த 9 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த ROS மினி பேருந்து, தற்போது புதிய பொலிவுடன் மீண்டும் தனது மக்கள் பணியைத் தொடங்கியுள்ளது.

பயணிகளின் நலன் கருதி மாற்றம்
பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், அன்றாட வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், மற்றும் அவசர மருத்துவத் தேவைக்காக மருத்துவமனை செல்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தச் சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்பேருந்து இயக்கம் பெறுவதால், வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும் இது பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கிராமங்கள் இணைப்பு
மக்களின் வசதிக்காக, மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் போன்ற சில புதிய கிராமங்களும் இந்த பேருந்து வழித்தடத்தில் தற்போது கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.இந்தப் பேருந்து சுழற்சி முறையில் (Rotation basis) பின்வரும் வழித்தடங்களில் இயங்கும்:

கோபாலப்பட்டிணம் பேருந்து நிறுத்தம்
 
கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் இருந்து இயக்கப்பட உள்ளது. 

பேருந்து வழித்தட விவரங்கள்

தீயத்தூர் TO பாக்கம்
வழி: பாதிரக்குடி, தளவரை, சேமங்கோட்டை, அரசநகரிபட்டிணம், புதூர், மீமிசல், கோபாலப்பட்டிணம், கீழஏம்பல், கிளாரவயல்.

பாக்கம் TO தீயத்தூர்
வழி: கிளாரவயல், கீழஏம்பல், கோபாலப்பட்டிணம், மீமிசல், புதூர், அரசநகரிபட்டிணம், சேமங்கோட்டை, தளவரை, பாதிரக்குடி.

தீயத்தூர் TO மீமிசல்
வழி: பாதிரக்குடி, தளவரை, சேமங்கோட்டை, அரசநகரிபட்டிணம், புதூர், கோபாலப்பட்டிணம், மீமிசல்.

மீமிசல் TO தீயத்தூர்
வழி: கோபாலப்பட்டிணம், மீமிசல், புதூர், அரசநகரிபட்டிணம், சேமங்கோட்டை, தளவரை, பாதிரக்குடி.

நேர அட்டவணை
பேருந்து இயங்கும் சரியான நேரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை உணர்ந்து மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ள இந்த மினி பேருந்து இயக்கத்திற்கு, அப்பகுதி கிராம மக்கள் தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
 
பயணிகள் கவனத்திற்கு
இந்த பேருந்து சேவையை கோபாலப்பட்டிணம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments