60 ஆண்டு பழமையான கட்டிடத்தை புதுப்பித்தபோது பயங்கரம் சென்னை மண்ணடியில் 4 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம் பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு



சென்னை மண்ணடியில் 60 ஆண்டுகால பழைய 4 மாடி கட்டிடத்தை புதுப்பிக்கும்போது திடீரென இடிந்து தரைமட்டமானது. ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

4 மாடி கட்டிடம்

சென்னை மண்ணடியில் உள்ள அரண்மனை காரர் தெருவில் 60 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த 4 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை சூளை பகுதியை சேர்ந்த பரத் சந்திரன் என்பவர் வாங்கியுள்ளார்.

இந்த கட்டி–த்தை புதுப்பிக்கும் பணி கடந்த 2 மாதமாக நடந்து வந்தது. இந்த பணியில் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இடிந்து விழுந்தது

இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் ஊழியர்கள் கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிக்காக வந்துள்ளனர்.

அப்போது, கட்டிடத்தின் உள்ளே மண் சரிந்து விழும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட சிறிது நேரத்தில் 4 மாடி கட்டிடம் முழுவதும் பெரும் சத்தத்துடன் சரிந்து தரை மட்டமானது. இதனால், ஊழியர்கள் பதறியடித்துக்கொண்டு வெளியேறினர். 

அப்பகுதி முழுவதும் புழுதி மண்டலமாக காட்சி அளித்தது.

அப்போது, அப்பகுதியில் நடந்து சென்ற ராஜசேகர், பார்த்திபன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. முகமது ஆரிப் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திர்யில் அனுமதிக்கப்பட்டனர்.

தீயணைப்பு துறை

தகவல் அறிந்து பாரிமுனை, ஐகோர்ட்டு, கொண்டித்தோப்பு பகுதிகளில் இருந்து 3-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன.

அப்போது, இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளார்களா என்று தீயணைப்பு வீரர்கள், போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், கட்டிட இடிபாடுகளை பொக்லைன் எந்திரங்களை கொண்டு அகற்றினர். ஆனாலும், கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளார்களா என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது.

பின்னர், அடையாறு மற்றும் அரக்கோணம் பகுதிதளில் இருந்து 25 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அதிநவீன எந்திரங்கள் மூலம் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல், ‘விக்டிம் ஐடென்டிபிகேஷன்' என்ற நவீன எந்திரம் மூலம் இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என சோதனையில் ஈடுபட்டனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் அருகில் இருந்த வீடுகள், கடைகள் உள்ளிட்டவை பெரும் சேதம் அடைந்துள்ளன. 

4 மாடி கட்டிடத்தின் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், சரக்கு வாகனங்கள், 2 சக்கர வாகனங்கள் என 5 வாகனங்கள் சேதம் அடைந்தன.

அமைச்சர்கள் ஆய்வு

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி–ராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தீயணைப்புத்துறை இயக்குனர் ஆபாஷ் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

யாரும் சிக்கவில்லை

கட்டிட உரிமையாளர் பரத் என்பவர் சமீபத்தில்தான் இந்த கட்டிடத்தை வாங்கியுள்ளார். இந்த கட்டிடம் 1,100 சதுர அடி ஆகும். இந்த கட்டிடம் 60 ஆண்டுகாலம் பழமையானது.

30 லாரிகளில் இந்த கட்டிட கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் எங்களின் கட்சியை சேர்ந்த பகுதி செயலாளர். 4 பேர் சிக்கியுள்ளதாக வந்த தக–வல் வதந்தி.

இவ்வாறு அவர் கூறினார்.

11 மணி நேரம்

நேற்று காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக போராடி கட்டிட இடிபாடுகளை மாநகராட்சி ஊழியர்களும், தீயணைப்புத் துறையினரும் அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து கட்டிட உரிமையாளர் பரத் சந்திரன் மீது எஸ்பிளனேடு போலீசார், அஜாக்கிரதையாக செயல்படுதல், பொதுசொத்தை சேதப்படுத்தல், கட்டிடத்தை மறுசீரமைக்கும் போது இடிந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments