புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம்!




கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம்பு புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 

இந்நிலையில் SMC திட்டத்தின் கீழ் அரசு நேரடி நிதி மூலமாக பள்ளிக்கூட கட்டிடங்களுக்கு புதிதாக பெயிண்ட், ஒரு வகுப்பறைக்கு டைல்ஸ் மற்றும் கழிப்பறைக்கு தண்ணீர் டேங்க் ஆகியவை பணி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் மார்ச் இறுதியில் பள்ளிக்கூடத்திற்கு அனைத்து வேலைகளும் முடிந்து ஜொலிக்கிறது





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments