கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் நள்ளிரவை குளிர்வித்த கோடை மழை.. இதமான காலைப் பொழுது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. 

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே   வெயில் கொளுத்தி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்களில் பெரும்பாலானோர் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் முடங்கி கிடக்கின்றனர்.வெயிலின் கொடுமையால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனாலும் கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது

வெயிலால் மக்கள் தவித்து வந்த வேலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் கோபாலப்பட்டிணம் பகுதிகளில் நேற்று மாலை வானம் தீடீர் மேகமூட்டமாக காணப்பட்டது பின்னர் நள்ளிரவு திடீரென  மழை பெய்தது. 

இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது.

தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. நள்ளிரவு பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. மேலும் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments