“10th-ல் Fail ஆகி படிச்ச நானே மாவட்ட கலெக்டர் ஆகிட்டேன் உன்னால முடியாதா ?”






10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவனுக்கு ஊக்கமளித்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால், உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற, மாணவனிடம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஊக்கமளித்து அட்வைஸ் கொடுத்த நிகழ்வு மனதை நெகிழ வைத்துள்ளது.

பல்லடம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை எனவும் அடிப்படை வசதிகள் இன்றி நோயாளிகள் தவித்து வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பல்லடம் அரசு மருத்துவமனையில் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் முதலுதவி சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சிறப்பு சிகிச்சை பகுதி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடம் முறையாக சிகிச்சை அளிக்கிறார்களா என்பது குறித்தும், அவர்களின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார்.

இதனையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பள்ளி மாணவனை எதிர்பாராதவிதமாக சந்தித்த மாவட்ட ஆட்சியார், அந்த மாணவனின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். 

அப்போது அந்த மாணவனை ஊக்கப்படுத்தும் விதமாக பேசிய அவர், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்து, பிறகு மீண்டும் தேர்வினை எழுதி படித்த நானே ஒரு மாவட்டத்தின் கலெக்டராக ஆகிட்டேன். அப்படி இருக்கும் போது உன்னால முடியாதா?. 

இப்போதுதான் நாம் இன்னும் தைரியமாக மேலே எழுந்து வர வேண்டும். தொடர்ந்து நன்றாக படி. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடு. நம்மால் முடியாதது என்று ஒன்றும் இல்லை. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்ததும் எனக்கு அலைபேசியில் அழைத்து கண்டிப்பாக சொல்ல வேண்டும் என ,மாணவனுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் அந்த மாணவனிடம் தொடர்ந்து பேசிய அவர், நானும் வாலிபால் பிளேயர் தான். உனக்கு அதில் ஆர்வம் இருந்தால் நன்றாக விளையாடு. உன்னுடைய பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசுகிறேன். எதை பற்றியும் கவலை படாதே. உறுதியோடு படி. தோல்விதான் வெற்றிக்கான அடுத்தபடியாக இருக்கும் என்று மாணவனிடம் மனவலிமை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments