அறந்தாங்கி அருகே மூன்று நாளாக மின்சாரம் இல்லை: சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!கொடிவயல் கிராமத்தில் மூன்று நாளாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் கொடிவயல் கிராமத்தில் மூன்று நாளாக மின்சாரம் இல்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள் கூறியதாவது, கொடிவயல் கிழக்கு பகுதியில் மூன்று நாட்களுக்கு மேலாக மின்சாரம் இல்லாமல் நாங்கள் அவதிப்படுகிறோம். 

இப்பகுதிக்கு மின்சாரம் வழங்கும் டிரான்ஸ்பாரம் பழுதாகியுள்ளது.
இது குறித்து மின்சார துறை மற்றும் அரசு அதிகாரியிடம் கூறியும் தற்பொழுது வரை மின்சாரம் சரி செய்யாமல் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறினர். 

கொடிவயல் கிழக்கு பகுதியில் இருந்து பேராவூரணி செல்லும் சாலையில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments